இலங்கை: மூதூர் முஸ்லிம்களின் வேதனைஇடைவிடாத போரினால் இலங்கை துயரத்தில் தத்தளிக்கிறது. அரசுக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவிகளின் உயிர்ப்பலிகள் தொடருகின்றன. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே நடை பெறும் போரில் எந்தவித பகை பரப்பும் முயற்சிகளில் ஈடுபடாத முஸ்லிம்களும் சிக்கிக் கொண்ட சோக நிகழ்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் என்ற துறைமுக நகரில் முஸ்லிம் கள் நிறைந்து வாழ்கின்றனர். திரிகோண மலைப் பகுதியில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடும் சண்டை மூண்டுவரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக் கும் இடையில் நிகழும் கடும் தாக்குதலில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் முஸ்லிம்கள் மூதூரிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதற்கு அரசு மீது கடுமையாகக் குற்றம்சாட்டுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, புலிகளின் மேல் கைகாட்டுகிறது இலங்கை அரசு.
மூதூர் அரபிக் கல்லூரி மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை ராணுவம் கூறு கிறது. மூதூரின் புறநகர் பகுதியான தொப்பூரில் உள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாகவும் அதில் ஐவர் கொல்லப் பட்டதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முஸ்லிம் இளைஞர் 100 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவல் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் தொடரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைப் போல் தெற்காசியாவில் படுபயங்கரமான நிகழ்வாக இது உருவெடுக்கக் கூடுமோ என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சிய சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை என விடுதலைப் புலிகள் தங்களின் பிரத்யேக வலைதளத்தில் மறுத்துள்ளனர்.
இதை மூதூர் பகுதியிலிருந்து வெளியேறிவிடும் முஸ்லிம்கள் கந்தாளையை நோக்கி டிரக்குகளிலும், கால்நடையாகவும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று வியாதியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் தாய்மார்கள் கண்ணீருடன் கதறியபடி இருக்க, முஸ்லிம் முதியவர்கள் குர்ஆனை அணைத்துப் பிடித்தபடி கந்தாளையில் அகதிகளாக வந்தனர். இலங் கையின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஏழரை சதவீதத்தினரே உள்ளனர்.
100 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதிகளாக விடுதலைப்புலிகள் பிடித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். இதையும் புலிகள் மறுத்துள்ளனர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நிகழும் யுத்தத்தில் முஸ்லிம்களும் பாதிக்கப் படுகின்றனர்.
எந்தவித தீங்கெண்ணமும் கொண்டு செயல்படாது தங்களது நாட்டின் முன்னேற்ற மற்றும் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த மென்மையான உள்ளம் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் தற்போது நடைபெறும் போரில் அகதிகளாக்கப் படுவது வேதனையல்லவா?
செல்லமாக வாழ்ந்த முஸ்லிம் குழந்தைகள் மூதூரிலிருந்து விரட்டப்பட்டு கந்தாளையில் அகதிகளாக துண்டு ரொட்டிக்காக ஏங்கி நின்ற காட்சி ஊடகங்களில் வந்தபோது காண்போர் கண்கள் குளமாகின.
அச்சத்தின் பிடியில் மூதூர் முஸ்லிம்கள்...
மூதூர், கிழக்கு இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மீன்பிடி ஊராகும். திரிகோணமலையிலிருந்து படகில் சவாரி செய்தால் ஒரு மணி நேரத்தில் மூதூர் சென்று சேரலாம். இங்கு வாழும் 60,000 மக்களில் 33,000 பேர் முஸ்லிம்களாவர். 22,000 பேர் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்கள் சிங்களம் பேசு வோராவர். ஊரின் மையப் பகுதியில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் மூதூரை தாங்கள் அமைக்க விருக்கும் தமிழீழத்தின் தலை நகரான திரிகோணமலையின் நுழைவாயிலாகக் கருதி வருகிறார்கள். முதூரில் முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் மட்டக்களப்பு வரை பரவியது. இதேபோல் முதூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை புலிகள் கடத்தி விட்டார்கள் என்ற பிரச்சினையை முன்வைத்து மோதல்கள் நடைபெற்று வந்துள்ளது.
அக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு லட்சம் முஸ்லிம்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். அதுபோன்ற நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மூதூர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்