நோபல் பரிசு பெற்றார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது னுஸ்அபூசாலிஹ்
இன்றைய உலகின் மிகப்பெரிய கொடுமை, 'வறுமையாகும்'. மாறி வரும் பொருளா தாரச் சூழலில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் ஏழை மக்கள் வாழ்கின்றனர். ஏழைகளைச் சுரண்டும் கூட்டம் ஒன்று சுரண்டி சுரண்டி கொழுத்து வருகிறது. மற்றொன்று ஏழை பாமரர்கள் படும் சொல்லொணா வேதனைக் கண்டு வெம்பி, நெக்குருகி அவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் ஒரு சிறு கூட்டம், கொஞ்சம் பரோபகாரச் சிந்தனை உடையவர்களாக, இயன்ற அளவு இல்லாதவர்களுக்கு தம்மிடம் உள்ளதை கொடுத்து மகிழும் இயல்பினராக வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லிக் கொடுத்த பாடமும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குத் தாக்கு பிடிக்க முடியும். மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தலே சாலச்சிறந்தது என்பதைப் போல நிரந்தரத் தீர்வு நோக்கி நகர்ந்தவர் கள் யார்? யார்? என்றுத் தேடித் தேடிப் பார்க்கிறோம். தீர்வும் தென்படவில்லை. தீர்வாளர்களும் தென்படவில்லை.
நேற்றைய இந்தியாவின் ஒரு துண்டான வங்கக் கடலோரம், கங்கை நதி தீரத்தில் வறுமையை ஒழிக்கும் சூத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு ஒரு தனி மனிதன் எழுந்தான். அவனது ஒவ்வொரு சம்பவங்களையும் சரித்திர சான்றுகளாக அவன் பிறந்த நாடும் பிறநாடுகளும் கொண்டாடி வருகின்றன. தொழில் தொடங்க கடன் வழங்குமாறு வங்கிகளை ஏழைகள் அணுக முடியுமா? ஏழைகளின் சொத்து எது? வறுமை மட்டும் தான். வறுமையை வைத்துக் கொண்டு கடன் கொடுக்க முடியுமா என்ன? ஏழைகள் மேலும் ஏழையாகவே மரித்துபோவதுதான் இன்றைய ஏழை பாமரர்களின் தலையெழுத்தா? என் றெல்லாம் எண்ணியபோதுதான் பொருளாதார ஊன்றுகோல் இன்றி தவித்துக் கொண்டிருந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு தாய்மார்களுக்கு தம்மால் ஏதும் செய்ய முடியுமா? என அந்த மனிதர் சிந்தித்தார். கந்து வட்டிக் கொடுமைக்காரர்களால் கசக்கி பிழியப்பட்ட ஏழைகளையும் ஏதுமற் றோரையும் அழைத்துக் கொண்டு பணக்காரர்களின் பகட்டுப் புகலிடங்களான வங்கிகளின் சொகுசு படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார். வங்கிகள் சொத்துக்கள் கேட்டது உத்தரவாதம் கேட்டு உசவியது. பத்திரங்களை காட்டுங்கள் என்று பாடாய்ப்படுத்தி எடுத்தது.
ஏழை பாமர மக்களின் வாழ்வில் வசந்தம் மலர என்ன வழி? என ஒருவர் சிந்தித்தார். அவர் அன்று சிந்தித்தது இன்று சரித்திரமாகி இருக்கிறது.
ஆம்! பங்களாதேஷின் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் சிந்தனையும் செயல்பாடும் அதன் விளைவால் விளைந்த வெற்றியும் இன்று நோபல் சமாதான விருதுக்கும் உலகின் பாராட்டுக்கும் உரிய தாக மாறிவிட்டது. சுய உதவி குழுக்கள், கிராம வங்கிகள் என்ற மந்திரச் சொற்கள் உலகில் முதன் முதலில் அறிமுகமாகிறது.
மூங்கில் மூலம் பொருட்களை தயாரித்தல், கறவை மாடுகளை வாங்கி பால் பண்ணை கள் நடத்துவது, கோழிப்பண்ணைகளை நடத்துதல், மீன் பிடித்தொழில் போன்றவை களை ஏழைப்பெண்கள் நடத்த அவர்கள் வாழ்வில் வறுமை மெல்ல மெல்ல அகலும் அற்புத நிகழ்வு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. அமெரிக்கா, இந்தியா உள்பட ஏராளமான நாடுகள் இந்த சுய வங்கி திட்டத்தினை ஏற்று செயல்படுத்தத் தொடங்கி விட்டன.
பங்களாதேஷ் வறுமை பிடித்த பூமி. ஏழைகளையும், பாமரர்களையும் வறுமைப் பிடியிலிருந்து மீட்க முடியாது அந்த அரசு திணறியது.
பங்களாதேஷில் பிரதான துறைமுகம் சிட்டகாங். அது அழகிய, ஆனால் ஆபத் தான துறைமுகம். வருடம்தோறும் பலதடவை, வங்கக் கடல் குமுறும் போதெல் லாம் சிட்டகாங்க் துறைமுகம் சின்னா பின்னமாகி விடுவதுண்டு. அதனால் கடற்புர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
கிராமங்களில் வாழும் கோடிக் கணக்கான ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் கிராமிய வங்கியை அமைத்தவர். கிராமப்புற ஏழை மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத் தவர். 'மகளிர் சுய உதவிக் குழுக்களின் தந்தை' என்றே அழைக்கப்படுகிறார் முஹம்மது யூனுஸ்.
அடிமட்டத்திலிருந்து பொருளாதார, சமுதாய, வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் சுயமுன்னேற்றத்தில் ஈடுபட்ட ஏழை பாமர மக்களை கைதூக்கி விடும் முயற்சி யாகவே கிராமியன் வங்கியை வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் அமைத்தார்.
தற்போது அவரது சாதனைக் கும், அவரது சாதனையின் சாதனமான கிராமியன் வங்கிக்கும் இணைந்தே நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக்குழு கூறியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 10லிஆம் தேதி ஆஸ்லோவில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் முஹம்மது யூனுஸுக்கு ரூ. 25 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.
நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதைப் பற்றி யூனுஸ் பதிலளிக்கும் போது; இது மிகவும் அருமையான விஷயம் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் வியப்பு தெரிவித்திருக்கிறார்.
கிராமிய வங்கியை உருவாக்கிய எமது முயற்சிக்கும் அதற்காக அரும் பாடுபட்ட தாய்மார்களின் உழைப்புக் கும் கிராமிய வங்கியை வெற்றிகர சாதனையாக்கிய தாய்மார்களுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகார மாகவே இதனைக் கருதுகிறேன். எனது எதிர்கால திட்டங்களை செழுமைப் படுத்த இந்நிகழ்வு எமக்கு ஊக்கம் வழங்குகிறது. இந்தப் பரிசுத் தொகை யையும் கிராமப்புற மக்களுக்கு கடன் வழங்குவதற்காக பயன்படுத்துவேன் என்கிறார் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ்.
வெளிநாட்டு கல்வி உதவியுடன் பொருளாதாரம் பயின்ற முஹம்மது யூனுஸ் கல்வி கற்று தனது தாயகம் திரும்பியபோது (1974) அங்கு பஞ்சமும், பட்டினியும் கோரதாண்டவமாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கிய அவர் தனது கையிலிருந்த சிறு தொகையான 227 டாலர்களைக் கொண்டு சிறு கடன் வழங்கத் தொடங்கினார். அன்று உருவான சிறு முயற்சி, சிறிய ஜுவாலையாக உலக ஏழை மக்களை வசீகரிக்கும் வெளிச்சமாக மாறியது. 1976லில் கிராமிய வங்கி தொடங்கப்பட்டது. ஏழை உழைக்கும் பெண்களுக்கே கிராமிய வங்கி கடன் வழங்குவதில் முன்னு ரிமை வகித்தது.
பங்களாதேஷிலுள்ள வணிக வங்கிகளுக்கு இணையாக கிராமியன் வங்கி விரை வாக வளரத் தொடங்கியது.
1983லில் பங்களாதேஷ் அரசு ஓர் சட்டத்தை இயற்றி கிராமியன் வங்கியின் பாதுகாப்பை உறுதிபடுத்தியது. இன்று பங்களாதேஷ் முழுவதும் 71லிஆயிரம் கிராமங்களில் 2 ஆயிரத்து 200 கிளைகளுக்கு இந்த ஏழை உழைக்கும் மக்களுக் கான வங்கி விரிவடைந்துள்ளது.
வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸ்லின் கிராமியன் வங்கி இதுவரை 66 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கடன்களை வழங்கியுள்ளது. இதில் 97 சதவீதம் பேர் பெண்கள் என்பது ஆச்சரியப்படுத்தும் உண்மையாகும்.
இன்றுவரை 25 ஆயிரத்து 740 கோடி ரூபாயை இவ்வங்கி கடனாக வழங்கியுள்ளது. அதில் 22 ஆயிரத்து 815 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
சற்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் வங்கிகளில் (அதாவது பெரிய பெரிய வங்கிகளில்) கோடிக்கணக்கில் கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் ஏப்பம் விட்ட, ஏப்பம் விட்டுக் கொண்டும் வரும் காட்சிகளை நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
ஆனால், ஏழை பாமர மக்கள் வாங்கிய சின்னஞ்சிறிய தொகைகளை நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டு திரும்ப செலுத்தியுள்ளனர். இந்த வங்கியின் கடன் வசூல் விகிதம் 98.85 சதவீதமாகும். இது வங்கியின் சிறந்த செயல்பாட்டின் அடையாளமாகும்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கும் இத்திட்டம்தான் இந்தியா வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தது.
வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸின் இத்திட்டம் மேல்திசையில் அமெரிக்கா முதல் கிழக்கில் இந்தியா உள்பட ஆப்பிரிக்க கண்டத்தின் உகாண்டா வரை உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பின்பற்றி நடக்கும் வழியாக மாறியுள்ளது.
உழைக்காமல் சோம்பித்திரியும் வீணர்கள் வெட்கப்படும் விதமாக, தன்மானத்தையும், சுய முன்னேற்றத் தையும் முன்னிலைப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் உழைக்கும் பெண்களின் சாதனைகள் அமைந்துள்ளது.
2004லில் அசோஷியேட் பிரஸ்க்கு முஹம்மது யூனுஸ் பேட்டியளித்தபோது: சூஃபியா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனதுமென்கரங்களால் மூங்கில் கூடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த கூச்ச சுபாவமுடைய இளம் பெண்ணிடம் வறுமை ஒழிப்பு போராளி முஹம்மது யூனுஸ் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
சூஃபியா பேகம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என யூனுஸ் கேட்டபோது 5 டாகா (பங்களாதேஷ் நாணயம்) கடன் தருபவர்களிடம் கடன் வாங்கி இந்த மூங்கில் பொருட்களை செய்வதாகக் கூறியிருக்கிறார். அப்போது முஹம்மது யூனுஸ் நினைத்தாராம் யா அல்லாஹ் இந்த இளம் பெண் 5 டாகாவிற்காக கடன் கொடுத்தவனுக்கு அடிமையாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதே என்பதை எண்ணி மனம் வருந்திய யூனுஸ் எப்படி இந்த ஏழைப் பெண்கள் மேலும் மேலும் ஏழைகளாக மாறுகின்றனர் என்பதைப் புரியாத நிலையில் தனது மாணவர்களின் மூலம் திறந்த சர்வே ஒன்றை ஜெôப்ரா என்ற கிராமத்தில் நடத்தியபோது, 43 கிராமப் பெண்களின் நிதிநிலை மிகவும் மோசமாக இருந்ததை சர்வேயின் முடிவு கள் தெரிவித்தன. 27 அமெரிக்கன் டாலர் இருந்தால் அவர்கள் அனைவரும் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையிலிருந்து மீட்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
உழைப்பிலும் உன்னத நோக்கத்திலும் சிறந்த அந்த மக்கள் ஓராண்டுக்குள் அந்தக் கடன் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்து வர்த்தகத்தில் உயர்வு கண்டார்கள்.
மைக்ரோசாஃப்ட் என்ற உலகின் மாபெரும் நிறுவனத்தையும் அதன் அதிபர் உலக பணக்காரர் பில்கேட்ஸை யும் பற்றி மட்டுமே அறிந்திருந்த உலகம் மைக்ரோ கிரெடிட் என்ற சிறு கடன்களை வழங்கும் வங்கியை அறிமுகப்படுத்தி உழைப்பு க்கு வலு சேர்த்து இல்லாமை இருளை அகற்ற போராடும் முஹம்மது யூனுஸின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியுள்ளது.
முஹம்மது யூனுஸ் 1940ல் சிட்டகாங் நகரில் தனது பெற்றோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். 14 பேரை உடன்பிறந்தவர்களாகக் கொண்டிருந்த முஹம்மது யூனுஸ் உடன்பிறந்த ஐவரை குழந்தைப் பருவத்திலேயே இழந்தார். யூனுஸின் தந்தை நகரில் பிரசித்த பெற்ற தங்க நகைத் தொழிலாளியாக இருந்ததால் தன் மகனின் உயர் படிப்புக்கு உரிய ஊக்கம் அளித்தார்.
பசிப்பிணி போக்கும் உயர் எண்ணத்தை தனது தாயார் சூஃபியா ஹாத்தூனிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகக் கூறும் யூனுஸ், ஏழைகளுக்கு உதவும் நோக்கம் கொண்டவர் அவர்களின் கதவுகளை உடைத்துக் கொண்டு சென்று உதவ வேண்டும், காலம் நேரம் பார்க்கக்கூடாது என்று தனது அன்னை சூஃபியா ஹாத்தூன் கூறுவார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
டாக்காவில் கிரமின் வங்கியின் தலைமை அலுவலகத்தில் தனது பௌதிக பட்டதாரி மனைவி அஃப்ரோஜி மற்றும் ஒரே செல்ல மகள் தீனாவுடன் இரண்டு அறை கொண்ட எளிமையான ப்ளாட்டில் வசிக்கிறார்.
ஆயிரக்கணக்கில், பிச்சைக்காரர்கள் உலாவும் பங்களாதேஷில் இன்று கிரமின் வங்கியின் சேவையால் பிச்சைக்காரர்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.
9 டாலர் கிரமின் வங்கியில் கடனாகப் பெற்று சிறு பொருட்களை வாங்கி விற்று, பின்னர் கடனையும் கண்ணியமாக திருப்பிச் செலுத்துகின்றனர். இன்று கிரமின் வங்கியின் வாடிக்கை யாளர்களாக பங்களாதேஷின் 50,000 பிச்சைக்காரர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டனர். அவர்களை மாற்றியது வறுமை ஒழிப்புப் போராளி முஹம்மது யூனுஸும் அவரது மூளையில் உதித்த கிரமின் வங்கியுமாகும்.
முஹம்மது யூனுஸின் அனுபவங்களும், வெற்றிகளும் அமெரிக்காவின் புறநகர் பகுதிகளை கட்டமைக்க உதவும் பாடமாக அமையும் என அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் கூறியிருக்கிறார்.
யூனுஸின் வறுமை ஒழிப்பு வங்கி திட்டம் உலகளாவிய ஒன்றாக மாறிவிட்டது. அவரது செயல்முறை இன்று 58 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்த், நார்வே போன்ற வளம் நிறைந்த நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. யூனுஸின் ஒரே கனவு வறுமை என்ற கொடிய நோயை இந்த பூமியை விட்டே விரட்ட வேண்டும் என்பதுதான்.
வறுமையை ஒழிப்பதற்காக குளிர்சாதன மாளிகை வளாகங்களில் அடிக்குரலில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளாக பேசிக்கொண்..............டே இருந்த கோட் சூட் கனவான்களை கோமாளிகளாக்கி முப்பதாண்டு காலத்திற்குள் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியுள்ளார் மனிதநேய அறிஞர் முஹம் மது யூனுஸ். இன்று நம்மூரில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கும் ஞானத்தந்தை யூனுஸ்தான்.
இதுவரை நோபல் பரிசுகளால் அதைப் பெற்றுக் கொண்ட அறிஞர்களுக்கு பெருமை சேர்ந்தது. நோபல் பரிசு முஹம்மது யூனுஸுக்கு வழங்கப்படுவதின் காரணமாக முதன்முறையாக நோபல்பரிசு பெருமை அடைகிறது.
நேற்றைய இந்தியன் (அறுபதாண்டு களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு துண்டாக இருந்தது பங்களாதேஷ்) இன்றைய பங்களாதேஷி என்றும் இந்த இஸ்லாமிய மனித நேயர் முஹம்மது யூனுஸை நாமும் வாழ்த்துவோம். ஈகைத்திருநாளை கொண்டாடும் முஸ்லிம் உலகத்திற்கு இதைவிட நற்செய்தி வேறென்ன இருக்க முடியும்

No comments:
Post a Comment