வாய்க்கொழுப்பை அடக்க வீட்டுக்கு அனுப்பு...ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய டீன் ஜோன்ஸ் சமீபத்தில் பெரும் பெருமையைப் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இலங்கைலிதென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் பந்தயம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, இலங்கை பேட்ஸ்மேன் சங்ககரா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் விளை யாட்டு வீரர் ஹாஷீம் அம்லா, குமார் சங்ககராவை ஆட்டமிழக்கச் செய்தார்.
இலங்கை லி தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது டெஸ்ட் பந்தயத்தில் நான்காவது தினத்தில் இது நடந்தது.
இது விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் விளையாடுவதும், எதிரணியைச் சேர்ந் தவரை அவுட் ஆக்குவதும் நடக்கக் கூடியதுதான். இங்கே பிறகு தான் நடக்கக் கூடாதது நடந்தது.
'அந்தத் தீவிரவாதி மற்றொரு விக்கெட்டை எடுத்து விட்டார்' லி என வர்ணணை யாளர் டீன் ஜோன்ஸ் கூறினார். வக்கிரமான இந்தக் கருத்து உலகெங்கும் கடும் பிரளயத்தை ஏற்படுத்தியது.
பதட்டமான இந்த உலகச்சூழலில் தற்போது ஓரளவாவது ஒற்றுமை காக்கப்பட்டு வருவதற்கு விளையாட்டுக் களங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தாடி வைத் தவர் என்பதால் ஹஷீம் அம்லாவை தீவிரவாதி என சற்றும் பொறுப்பின்றி உளறிக் கொட்டிய ஜோன்ஸுக்கு கைமேல் பலன் கிடைத்தது.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜெரால்ட் மஜோலா, இந்த கிறுக்குத்தனமான கமெண்ட் அடித்ததற்காக ஜோன்ஸ் மீது அவரை வேலைக்கு அமர்த்திய டென்ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித் தார்.
அதனைத் தொடர்ந்து டென்ஸ் போர்ட்ஸ் நிர்வாகம், ஜோன்ஸை வேலையை விட்டு நீக்கியது. (டென் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு ஒளிபரப்பு சேனல் துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேனல் என்பது தெரிந்ததே)
தவறான வர்ணனையால் வேலையை இழந்து, சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திருப்ப அனுப்பட்ட டீன் ஜோன்ஸ், மெல்போர்ன் வானொலிக்கு பேட்டியளிக்கும்போது,
''நான் நான்கு ஐந்து வினாடிகள் பொறுத்திருந்தேன். கொஞ்சம் மனம் புரண்டு அந்த முட்டாள்தனமான காரியத்தைச் செய்து விட்டேன். இச்சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது என்று கூறியிருக்கும் ஜோன்ஸ் முழுநீள மன்னிப்புக் கடிதம் ஒன்றை தென் ஆப்பிரிக்க ஆட்டக்காரர் அம்லாவுக்கும் தென்ஆப்ரிக்க அணிக்கும் கொடுத்துள்ளார்.
நான் அம்லாவிடம் எனது மனப்பூர்வமான மன்னிப்பை நேரடியாகத் தெரிவித் தேன். அவர் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் என்றார் ஜோன்ஸ்.
முன்னதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோன்ஸ், தான் இஸ்லா மியக் கொள்கைகளின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களே என்றும் ஜோன்ஸ் குறிப்பிட்டிருக் கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் சுயேச்சையான வர்ணனையாளர் ஜோன்ஸின் ஒப்பந்தத்தினை டென் ஸ்போர்ட்ஸ் சேனல் முடித்துக் கொண்டது.
ஒருகண நேர ஊசலாட்டத்தில் ஜோன்ஸ் இத்தகைய வார்த்தைகளை உதிர்த்திரு க்கிறார் என மெல்போர்ன் வர்த்தக வானொலி தெரிவித்திருக்கிறது.
கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது ஒரு நாளுக்கு 400 முதல் 1000 டாலர் வரை ஊதியமாகப் பெறும் வாய்ப்பை ஜோன்ஸ் இழந்துவிட்டார்.
இனவெறி தொனிக்க பேசுவது, தனி நபரை வேதனைப்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தெரி வித்திருக்கிறார். இது நேரடியாக ஒளிபரப்பாகும்போது மேலும் பொறுப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மனதில் மாசு இருந்ததால்தான் இத்தகைய வெறிக்கருத்துக்களை உதிர்க்க முடியும் என்பது வெளிப்படை.
சில ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்தை முறைதவறி விமர்சிப்பது வழக்கமாகி வருகிறது. சில உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் அமைப்புகளும் உள்நோக்கம் கொண்ட ஊடகங்கள் சிலவும் இத்தகைய துவேஷப் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றன.
மிகக்குறுகிய நோக்கம் சிறிய கட்டமைப்புகளின் சுயலாபத்திற்கு உலகில் பெரும் பான்மையாக வாழும் நடுநிலையாளர்கள் பலியாகி விடக்கூடாது.
சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு அமெரிக்கா சர்வதேச அரசியலில் தனிக் காட்டு ராஜாவாக உலாவருவது மட்டுமே உலகின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் உலகை சுரண்டும் தங்கள் சுயநலன் சார்ந்த வெளியுறவு அரசியல் மூன்றாம் உலக நாடுகள் கண்களை உறுத்திவிடக் கூடாது. அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்ற பதட்ட த்தின் காரணமாக 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற 'கற்பனை எதிரியை' உருவா க்கி உலவ விட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய மிகைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தக் கதையை பிரபலப்படுத்தும்போது தங்கள் சக்தியை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.
ஆனால் இவர்களைப் பார்த்து போலியான கருத்தோட்டத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த டீன் ஜோன்ஸ் போன்றவர்கள் பாவம் பரிதாபகரமான நிலையை பரிசாகப் பெறுகிறார்கள்.
இத்தாலிய கால்பந்தாட்ட வீரர் மேட்டரோஸியும் இதைப் போன்ற ஒரு பைத்தியக் காரத்தனமான செயலை செய்து நாகரீகம் பேணும் மக்களால் வெறுக்கப்பட்டார். இதனால் அவரது நாடான இத்தாலி உலக கால்பந்தாட்டப் போட்டியில் பெற்ற வெற்றி கூட சாக்கடையில் விழுந்த பந்தாக மாறிப் போனது. பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவர் ஜெயினுதீன் ஜிடேனின் ஆவேசம் கலந்து ரோஷம் உலகம் முழுவதும் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தது.
இத்தகைய போக்கு அபாயகரமானது என்பதை அரசுகள் உணர வேண்டும். பெருகி வரும் தீவிரவாதத்தினால் உலகம் முழுவதும் பாதிக்கப்படுவதில் முஸ்லிம் களே அதிகம் எனலாம். தீவிரவாதச் செயல் ஒரு இடத்தில் நடந்தது எனில், அதில் பலியாகின்றவர்களைப் போல் 100 மடங்கு முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்க ப்படுகின்றனர். இலக்கில்லாமல் புறப்படும் விசாரணையினால் வகை தொகை யில்லாமல் மனித உரிமை மீறிய கைதுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கைது செய்யப்படும்பொழுது பெரிதாக்கி காட்டப்படும் அந்த அப்பாவிகள், எந்தக் குற்ற மும் செய்யாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படும் பொழுது எந்த ஊடகமும் அவர்களைக் குறித்து சில வரிச் செய்தி கூட வெளியிடுவதில்லை என்பது பரிதாபகரமானது.
அரசாங்கத்தின் சில ஊடகங்களும், சில அதிகாரிகளின் நடவடிக்கைகளும், வக்கிர சிந்தனையாளர்களும் வெளிப்படுத்தும் தீவிரவாத சொற்பிரயோகங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனில் அரசு சில சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக இளம் பெண்களைக் கேலி செய்யும் காலித்தன இளைஞர்களை தண்டிக்க ஈவ் டீசிங்குக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது போல் தலித் சகோதரர்களை அவர்களது சமூகம் குறித்து இழிவாகப் பேசினால் தீண்டாமை தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பது போல் தீவிரவாதப் பட்டங்களை சகட்டு மேனிக்கு உதிர்ப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முகமாக கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் பல சாதக அம்சங் கள் உள்ளன.
1. வாய்க்கொழுப்பு வக்கிர சிந்தனையாளர்கள் அடக்கப்படுவார்கள்.
2. நீ தீவிரவாதி, அவன் தீவிரவாதி என்று உளறி நாட்டையே ஒரு தீவிரவாத மண்டலம் போல சித்தரித்துக் காட்டும் உருப்படாத பேர்வழிகளிடமிருந்து நாட்டின் அப்பாவி இளைஞர்களை வேதனையிலிருந்து மீட்கலாம்.
3. தீவிரவாதிகளை தனிமைப்படுத்த முடியும்.
எனவே, அரசுகள் இவ்விஷத்தில் கடுமை காட்டி கவனத்துடன் செயல்பட வேண் டிய தருணமி

No comments:
Post a Comment