உங்கள் பணம் எங்கள் குழந்தைகளைத் திருப்பித் தருமா?மலேகான் குண்டுவெடிப்பில் கதறிய பெற்றோர்
08லி09லி2006 வெள்ளிக்கிழமை. மஹாராஷ்ட்ரா மாநிலம் மலேகான் நகரில் உள்ள நூரானி பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குழுமியிருந்தனர். சுமார் 1.55 மணியளவில் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து பெரும் சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளனர். அங்கே நின்று கொண்டிருந்த முஸ்லிம்களின் உடல்கள் சிதற, மற்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனிடையே மஸ்ஜிதின் வாசலில் இருந்த பூந்தொட்டி யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்க அங்கும் உடல்கள் சிதறியுள்ளன. இதையடுத்து பள்ளிவாசலுக்குள் குழுமியிருந்த முஸ்லிம்கள் தலைதெறிக்க வெளியேற, அப்போது சில குழந்தைகள் நெரிசலில் சிக்கியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்ததாக பத்திரிகை யாளர்கள் ஏகோபி த்து கூற, இல்லை இல்லை 31 பேரே இறந்தனர் என்று போலீஸார் மறுப்பு வாசித்துள்ளனர்.
வெடிக்காத இரண்டு குண்டுகளும், ஒரு மோட்டார் பைக்கும் கேட்பாரற்று கிடந்த தாகவும், அதில் ராஜ் என்று பெயின்டால் எழுதப்பட்டிருந்ததாகவும் மும்பை மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சைக்கிள்களிலும், பூந்தொட்டியிலும் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. குண்டுவெடிப்பு இரண்டு இடங்களில் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. ஆனால் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக வந்த தகவ லின்படி, நான்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என உள்துறை தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பீதியில், மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி யதில் நெரிசலில் சிக்கி ஏராளமான குழந்தைகளும் பலியானதாகவும் கூறப்படு கிறது.
பள்ளிவாசலின் வெளிப்புறம் முழுவதும் உடல்களும், கை கால்களும், ரத்தத் துளிகளும் எங்கும் காட்சியளித் துள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள வாடியா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மலேகான் நகர மருத்துவமனைகள் நிரம்பி வழிந்துள்ளன. இதையடுத்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாசிக் நகருக்கு காயம் அடைந்தோர் கொண்டு செல்லப்பட்டனர்.
குண்டுவெடிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப் பட்டன. சர்ச்சைக்குரிய வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கென சங்பரிவார் அமைப்புகள் முக்கிய சாலைகளை அடைத்து 'வந்தே மாதரம்' பாடல்களைப் பாடும் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் பல நிகழ்ந்த அந்த நாட்களில் முஸ்லிம்கள் அமைதி காத்தனர். பெருந்தன்மைப் பேணிய சிறுபான்மை மக்களுக்கு நிகழ்ந்த இந்த வேதனை நிகழ்வுகள் நடுநிலையாளர்களுக்கு மத்தி யில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படு த்தியது.
மலேகான் நகரில் இதுவரை நடந்த கலவ ரங்களைப் பட்டியலிட்ட நாட்டின் பெரு ம்பாலான பத்திரிகைகளுக்கு சமீபத்தில் சமூக அமைதி பேணிய மலேகான் முஸ்லிம்கள் கண்ணியம் காத்த இரு சம்பவங்கள் கண்ணில் படாதது பரிதாபத்திற்குரியது.
எட்டு லட்சம் முஸ்லிம்கள் அமைதிக் காத்த நிலையிலும் 500 பேர் அடங்கிய ஒரு கும்பல் ஆசாத் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது. கூடிய கூட்டத்தின் ஆத்திரத்தைத் தணிக்க முடியாமல் காவல்துறை திணறியது. காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் செய்தி மட்டும் தவறாமல் எல்லா பத்திரிகைகளிலும் இடம் பெற்றிருக்கிறது.
வெடித்த பொருள் சாதாரண வெடிபொருளாக இருக்கும் என்று முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அவை ஆர்.டி.எக்ஸ் வகையைச் சேர்ந்தவையாக இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. அப்பாவிகள் மீதான கொடுந்தாக்குதல்கள் நாட்டில் தொடர்கிறதே என அனைவரும் வேதனை அடைந்துவரும் நிலையில், நாட்டிலுள்ள மக்கள் அனைவரின் குறிப்பாக முஸ்லிம் களின் ரத்தத்தை கொதிக்கச் செய்யும் செய்தி தினமலர் பத்திரிகையில் இடம்பெற் றிருந்தது. பல ஆண்டுகளாக சங்பரிவாரின் ஊதுகுழ லாகவும், ஊடக பயங்கர வாதத்தைப் பரப்புவதில் முன்னணியிலும் இருக்கும் தினமலர் நாளேடு, ''மசூதியில் இருந்த குண்டுவெடித்தது'' என்று செய்தி வெளியிட்டிருந்தது. தினமலரின் இந்த ஈனச்செயல் மனிதநேயம் படைத்தோரின் வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
மலேகான் குண்டுவெடிப்பு மிகவும் வெட்கக்கேடானது என பிரதமர் மன்மோகன் சிங்கும், கோழைத்தனமானது என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட முஸ்லிம்களை சோனியா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தத் துயரமான சூழலில் அமைதி காத்து சகோதரத்துவம் பேண வேண்டும் என இந்தியக் குடியரசுத் தலைவர் மலேகான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத் திருந்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு அப்பகுதி முஸ்லிம்கள் தங்கள் சொந்தங்களை பிணக்குவியல்களுக்கிடையில் தேடிக் கொண்டிருந்தபோதும் மருத்துவமனைகளு க்கு ரத்தம் சொட்ட சொட்ட தங்கள் குழந்தைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றபோதும் சொந்தங்கள் அமைதி காக்க வேண்டும் என மலேகான் முஸ்லிம் பெரியவர்கள் காவல்துறையினரின் வாகனங்களில் சென்று நகரின் முக்கிய சாலை களிலும், மூலை முடுக்குகளிலும் பயணம் செய்து மக்களை ஆறுதல்படுத்தினர். இதுவும் பெரும்பாலான ஊடகங்களில் பார்த்திருக்க முடியாது. (டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஒருசில பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது)
உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்த்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் பாதகச் செயலை நாடெங்கும் உள்ள நடுநிலை யாளர்கள் கண்டித்தனர். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கென நறுமணம் பூசி பூரிப்புடன் சென்ற முஸ்லிம்கள் தங்கள் அன்புக் குரியவர்களை ரத்தம் பீறிட வாகனங்களிலும், மாட்டு வண்டிகளிலும் கொண்டு செல்லும் அவல நிலை அங்கு நெஞ்சத்தை நொறுக்கும் காட்சியாக இருந்தது.
ஆயிரக்கணக்கானோர் தங்களுடன் சின்னஞ்சிறார்களை பள்ளிவாசலுக்கு அழைத் துச் சென்றனர். துள்ளி ஓடும் சிங்கக் குட்டிகளாக வந்த சிறார்களை பலர் குண்டு வெடிப்புகளிலும், நெரிசலிலும் சிக்கி நசுங்கிய மலர்களாக அள்ளிச் சென்ற காட்சி காண்போர் கண்களைக் குளமாக்கியது.
ஒருமணி நேரத்திற்கு முன்பு என்னோடு நடந்து வந்தவனை இப்போது அள்ளிச் செல்லும் நிலைக்கு ஆளாகி விட்டேனே எனக் கதறுகிறார் குண்டு வெடிப்பில் தனது 8 வயது மகனை இழந்த முஹம்மது ஆரிஃப்.
ஷஃபீக் அஹ்மத், ஷக்கீல் அஹ்மத் என்ற இரு சகோதரர்களும் தங்களுடன் வந்திருந்த குழந்தைகளை இந்த குண்டுவெடிப்பில் பறிகொடுத்தனர். மாநில அரசு அறிவித்த நஷ்ஈட்டுத் தொகையை மகாராஷ்ட்ர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் வழங்கியபோது இருவரும் வாங்க மறுத்தனர்.
எந்தப் பணத்தினாலும் எங்கள் குழந்தைகளை திரும்பத்தர முடியாது. மகாராஷ்ட்ர அரசு எங்களுக்கு வாக்களித்தபடி நல்ல மருத்துவமனையை அமைத்துத் தரவில் லை என ஆவேசமாகக் கூறினார். ஷஃபீக் அஹ்மத், ஷக்கீல் அஹ்மத் என்ற அந்த இருவரின் குழந்தைகளும் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாமலே உயிரிழ ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னால் 10 லட்சம் ரூபாய் கூட கொடுக்க முடியும் என்று ஆத்திரப்பட்ட ஷஃபீக், உங்கள் அரசு எங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என கதறித் தீர்த்தார். நாங்கள் முஸ்லிம்கள் என்பதால்தான் இப்படிச் செய்கிறீர்கள் என்றும் ஆவேசமாக கேள்வி விடுத்தார்.
நடந்தவை அனைத்தையும் சலன மின்றி பார்த்துக் கொண்டிருந்தார் மகாராஷ்ட்ரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக். அவர் செல்லுமிடங்களி லெல்லாம் குழந்தைகளை இழந்த தந்தையர்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் மக்களின் முன்பாக திணறிக் கொண்டிருந்த அரிய(!) காட்சியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பார்த்துக் கொண்டிருந் தார்.
மனித உயிர்கள் உண்மையிலேயே விலை மதிப்பில்லாதது. பணத்தினால் ஈடுசெ ய்ய முடியாது. எனினும் இது அரசு பணமல்ல. உங்கள் பணம் தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள். மத்திய அரசும் இதற்கு சமமான இழப்பீட்டுத் தொகை வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் குரலை தாழ்த்தி பாதிக்கப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். விரைவில் அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட் டது.
35 வயது ஹாரூனின் சகோதரர், மகன் அஜார் (10 வயது) மற்றும் 5 வயதேயான ஆன மருமகன் அன்சார் ஆகிய மூவரும் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். ஹாரூனின் 6 வயது மகன் அஃபீர் மயிரிழையில் உயிர் பிழைத்தான்.
இழப்பீட்டுத் தொகையை வாங்க மறுத்த ஹாரூன், நாங்கள் எங்கள் அன்புக்குரி யவர்களை இழந்துள்ளோம். எங்களுக்கு பணம் தேவையல்ல. பணத்தினால் இறந் தவர்களைத் திரும்ப அழைத்து வரமுடியாது. சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண் டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் கோரிக்கை வைத்தார். மலேகான் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு தினமும் வேலை நாட்களின் நேரம் 1.35 முதல் 5.30 வரை. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழு கையை முன்னிட்டு 10.30 முதல் 1.30 வரைதான் கல்விக்கூடங்கள் செயல் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரக்கமற்ற மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி ஒருமுறை இது நிகழாது.
குற்றவாளிகளின் வரைபடங்கள்
மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்து ள்ளனர். சைக்கிள்களில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் சைக்கிள்கள் வாங்கப்பட்ட இரண்டு கடைக்காரர்கள் கூறிய தகவலின் பழ சதிகாரனின் வரைபடங்களை நாசிக் பகுதி காவல்துறை ஐ.ஜி. பி.கே.ஜெயின் வெளியிட்டார். மேலும் தடயவியல் வல்லுனர்களின் அறிக் கைக்காக காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
சதிகாரர்கள் குறித்து மூன்று முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப் பிட்ட அவர், பெரிய கபர்ஸ்தானில் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டதை மறுத்தார். தேசிய பாதுகாப்புப் படை நிபுணர்கள் உட்பட 20 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு இந்த வழக்கின் புலன் விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வந்தாரை வாழ வைத்த மலேகான்
மலேகான் நகர மக்கள் இரக்கமும் கருணையும் பரோபகார சிந்தனையும் உடைய வர்களாகத் திகழ்கின்றனர். இஸ்லாமியச் சிந்தனைகளில் அவ்வளவு தெளிவு இல்லாத நிலையிலும் மார்க்க உணர்வு நிரம்பியவர்கள். வடஇந்திய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எந்தத் துயரம் ஏற்பட்டாலும் அவர்களையெல்லாம் இருகரம் நீட்டி வரவேற்கும் மலேகான் நகரம். ஆங்கிலேயர் அடக்குமுறையை எதிர்த்துப் போர் புரிந்த டெல்லி முஸ்லிம்களை ஆங்கிலேயர்கள் அச்சுறுத்தி துன்புறுத்திய போது அவர்களையும் மலேகான்தான் வரவேற்றது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் மோடிக் கூட்டத்தால் குதறப்பட்ட போது வேதனை வழிய வந்த குஜராத் முஸ்லிம்களை தாய்ப்பாசத்துடன் வரவேற் றது மலேகான் நகரம். குஜராத்தில் டெய்லராக இருந்த குத்புதீன் அன்சாரியும் அவ்வாறு மலேகான் வந்தவர்தான். சங்பரிவார் காலிகள் குஜராத்தில் வெறியாட் டம் ஆடியபோது துயரம் தாங்காது அன்சாரி கண்ணீர் தாரையாய் ஓட கையெ டுத்துக் கும்பிட்ட காட்சி ஊடகங்களில் வெளியானது உலகெங்கும் வாழும் மனித நேயமுடையோரின் இதயங்களில் ரத்தத்தை கசியச் செய்தது. இந்த புகைப்படம் வெளிவந்த பின்பு அவர் கொல்கத்தா சென்றுவிட்டதாக பின்னர் வந்த தகவல் கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment