பள்ளிவாசல்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் முதல்முறையல்லமலேகான் பள்ளிவாசல்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் இது முதல் முறை யல்ல. முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில்
1) பார்பானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித்,
2) பூனாவில் உள்ள ஒரு பள்ளிவாசல்,
3) ஜால்னாவில் உள்ள பள்ளிவாசல் ஆகிய வற்றிலும் குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இதில் பார்பானியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயமடைந்தனர். நான்டெட் பகுதியில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பர்பானி பள்ளிவாசல் குண்டுவெடிப்பு மற்றும் நான்டெட் குண்டுவெடிப்பு குறித்தும் தீவிரவமாக விசாரித்து வருவதோடு மலேகான் குண்டுவெடிப்பிலும் அந்த சக்தி களுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என ஆய்வு செய்து வருவதாகவும் தீவிரவாத தடுப்புக் காவல்படைத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
பர்பானி, பூனா, ஜலான், பள்ளிவாசல்களில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்திய பாணியே இங்கும் பின்பற்றப்பட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாத தடுப்புத்துறை இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்து உள்ளது. நான்டெட் பர்பானி குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் வெறிக்கருத்துக்களை உதிர்த்துள்ளனர். இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பதிலடியாக நாங்கள் இந்த நான்டெட் பகுதியில் குண்டுகள் தயாரித் தோம் என அவர்கள் விசாரணையின்போது தெரிவித்ததாக தீவிரவாத தடுப்புக் காவல்படை தெரிவித்துள்ளது. (அடப்பாவிகளா? அப்பாவிகளின் உயிர்க ளையா பறிப்பது?)
அழிவின் சக்திகளை அடையாளம் காண அரசுகளுக்கு இன்னும் தயக்கம் ஏன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கட்டுரைகள் விரிவாகவும். ஆழமாகவும் உள்ளது. தொடர்ந்தும் பணியாற்ற என் வாழ்த்துக்கள்
Post a Comment