இஸ்ரேலை வீழ்த்தியது ஹிஸ்புல்லாஹ்!34 நாள் போரில் பிரமிக்கத்தக்க வெற்றி!!
அபூசாலிஹ்
1948ல் கள்ளங்கபடமற்ற அரபு பூபாகத்தில் வஞ்சக நோக்கம் கொண்ட மேற்குலக சக்திகளால் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் என்ற மனிதகுல விரோத அரசின் படைகள் வரலாற்றிலேயே முதன் முறையாக முறியடிக்கப் பட்டது.
இதன்மூலம் 58 ஆண்டு களாக தனது கோரத் தாக்குதல்கள் மூலம் வளைகுடா பகுதியைக் குதறிய ஜியோனிஸ சக்திகளின் ஆட்டம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேல் என்றால் ஒரு போக்கிரித்தனமான வல்லரசு. அதனோடு மோதும் நாடு கள் சிதறி சின்னாபின்னமாவது உறுதி என்று இஸ்ரேலுக்கு ஆதரவான கருத் தோட்டம் நேற்றுவரை உலகம் முழுவதும் நிலவி வந்தது உண்மை.
இஸ்ரேல் தன்னை தாக்கியவர்களை மிகவும் மோசமாக தண்டிக்கும். ஒரு அடி கொடுத்தால் 10 அடி கொடுக்கும் வல்லமை இஸ்ரேலுக்கு உண்டு என தலைக்கு மேலே மட்டுமல்ல, தலைக்கு உள்ளேயும் ஒன்றுமேயில்லாத நம்நாட்டு பத்திரிகை யாளர் ஒருவரும் அவரைப் போன்று சிலரும் வக்காலத்து வாங்குவதைப் போன்று இஸ்ரேலின் ராணுவ வல்லமை அப்போது விளங்கியது.
1948 தொடங்கி திடீர் திடீரென ஏற்படுத்திய வலுச்சண்டைகளின் மூலம் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தது. அரபுகளை அழிப்பதே தனது முழுமுதற் கடமை எனக் கருதி அழிவு வேலைகளில் முழுமூச்சாக இறங்கியது.
6 நாள் போர் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட எகிப்து, சிரியா, ஜோர்டான் என்ற அரபகத்தின் பிரசித்திபெற்ற நாடுகளின் படைகளை சர்வ அலட்சியமாக இஸ்ரேல் நசுக்கியது. இதன்விளைவாக சிரியாவுக்குச் சொந்தமான கோலன் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும், லெபனானின் ஷேபா பண்ணைகளையும், ஜெரு ஸ்ஸலமின் பெரும் பகுதிகளையும் அது கபளீகரம் செய்தது.
1970களில் ராணுவ வல்லமையால் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் தொடங்கிய ஈராக்கை, அணுதொடர்பான சோதனைகளில் இறங்கிய ஈராக்கின் அணுக்கரு உலையின் மீது வலுக் கட்டாயமாக வான் தாக்குதல் நிகழ்த்தி அந்த எண்ணெய் வள அரபு தேசத்தின் அணுஆயுதக் கனவைச் சிதைத்தது.
எல்லைக் கடந்த எச்சரிக்கை உணர்வும், கரை காண முடியாத கோழைத்தனமும் நிறைந்த இஸ்ரேல் பேரழிவு ஆயுதங்களைக் கப்பல் கப்பலாகவும், விமானங்களிலும் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த இஸ்ரேல், புதிய புதிய சதி ஆய்வுத் திட்டங்களை அமெரிக்கா விடம் இருந்து உடனடி டெலிவரியில் வாங்கிவந்த இஸ்ரேல், 200 அணு குண்டுகளை தன்னகத்தே பதுக்கி வைத்திருப்பதாக நம்பப் பட்ட இஸ்ரேல், கடுமையான பயிற்சி பெற்ற 5 லட்சம் தரைப்படை வீரர்களைக் கொண்ட இஸ்ரேல், ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் செயல்பட்டுவந்த 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வீரர்களை மட்டுமே உள்ளாக்கியுள்ளதாக நம்பப்படும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் படுதோல்வி அடைந்தனர்.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேல் தனது வன்தாக்குதல்கள் மூலம் மனித உரிமைகளை மீறியது. ஏழைகளின் தேசமான லெபனானை இரக்கமற்று தாக்கியது. மேற்குலக ஊடகங்கள் அப்பாவிகளைக் கொன்று மீசையை முறுக்கிய இஸ்ரேலை, உலகின் நான்காவது வல்லரசு என அடை மொழியிட்டு அழைத்தன.
லெபனான் போர்க்களத்தில், ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் இஸ்ரேலியப் படை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய காட்சியை அமெரிக்க ஆதரவு ஊடகங்களே மறைக்க முடியாமல், மழுப்ப முடியாமல் வெளியிட வேண்டியதாயிற்று.
எவ்வளவு காலம் உண்மையை மறைக்க இயலும். இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு செல்லம் கொஞ்சிய சூப்பர் த்ரோவா போர்க்கப்பல் மன்சூரி கடற்கரைப் பகுதியில் தென்பகுதி நகரான டயரின் அருகில் சர்வ அலட்சியமாக ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் தகர்க்கப்பட்டது.
உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் வந்த அந்தக் கப்பலின் 'அகால மரணம்' யூத பயங்கரவாதிகளின் கம்பீரக் கனவை கலைத்துப் போட்டது. நேரடியான தாக்குதலில் கொழுந்துவிட்டு அந்த போர்க்கப்பல் எரிந்த காட்சியை அல்மனார் தொலைக் காட்சி ஒளிபரப்பிய போது லெபனான் மக்கள் கண்டுகளித்தனர்.
நவீன ராணுவக் கட்டமைப்பான இஸ்ரேலியப் படையினரால் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் கூர்மையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
50 ஆண்டுகால பழமைவாய்ந்த கட்யூஷா ராக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ஹைஃபாவிலும் இஸ்ரேலின் பிற எல்லையோரப் பகுதிகளிலும் ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள் நிகழ்த்திய வானவேடிக்கை இஸ்ரேலின் ராணுவ வல்லமை ஒரு மாயை என்பதை வெளிச்சம் போட்டு காட்டின.
குறைந்தபட்சம் நான்கு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் வீழ்த்தப்பட்டன. ஒரு போர்க்கப்பல் தகர்க்கப்பட்டது. இஸ்ரேலின் பெருமை க்குரிய மெர்க்கவா டாங்குகள் அழிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 44 மில்லியன் டாலர் பெறுமதியுடையது இந்த டாங்குகள்.
இஸ்ரேலின் 12 கவச வாகனங்கள் போர்க்களத்தில் அழிக்கப்பட்டன. 130க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர்.
தரைப்படை தாக்குதலை தொடங்கி விட்டால் அவ்வளவுதான் ஹிஸ்புல்லாக் கள் முழுமையாக அழித்தொழிக்கப் படுவார்கள் என ஆணவமாக அறிவித்த இஸ் ரேல் தரைப்படையை அணியணியாய் லெபனானை நோக்கி புறப்பட வைத்தது. ஹிஸ்புல்லாக்களின் விஸ்வரூபத்தைக் கண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகள் மூச்சுத் திணறினர். தனது தரைப்படை தளபதியை மாற்றப் போவதாய் அறிவித்தது. எல்லைப்புற நகரைவிட்டு தன் நாட்டு மக்களை இடம்பெயருமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கெஞ்ச ஆரம்பித்தது.
ஒரு மாதம் தாண்டி ஒரு நீண்ட தாக்குதலில் எந்த வல்லரசு பின் பலமுமற்ற நாட்டை இரக்கமற்று தாக்கியது. ஆயுதங்கள் ஏந்தாத அப்பாவிக் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்தது. அப்பாவிகளை மட்டுமே கொலை செய்த ஜியோனிஸ நாட்டை, ராணுவ வல்லமை மிகுந்த நாடு என்று மேற்கத்திய ஊடக ங்களும் நம்மூர் ஊடகங்களும் சித்தரித்தன.
பிரிட்டனிலிருந்து வெளிவரும் சில ஊடகங்கள் இஸ்ரேல் உலகின் நான்காவது வல்லமை மிகுந்த நாடு என்று புளுகித் தள்ளின. அவையெல்லாம் பழங்கதை என மாற்றினர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள்.
குழந்தைகள் பெண்கள் உட்பட 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமாக இருந்த, லெபனா னின் உள்கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்த, விமான நிலையம், நெடுஞ் சாலைகள், பாலங்கள், மின்நிலையங்களைத் தாக்கி நிர் மூலமாக்கிய இஸ்ரேலின் குற்றச் செயலையும், வெறுமனே கைகட்டி வேடிக்கைப் பார்த்த சர்வதேச சமூகத் தின் பரிதாப நிலை கண்டு சமுதாய ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
ஜனநாயகக் காவலனாக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை முடக்கி போட்டது. லெபனானில் இஸ்ரேலின் நோக்கம்(!) நிறைவேறும்வரை ஒத்துழைக்கப் போவதாகக் கூறியது.
அமெரிக்காவால் அனுப்பப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கப்பல் கை கொடுக்கும் என்ற ஆவணத்தில் ஹிஸ்புல்லாக்கள் அழிக்கப்படும்வரை இஸ்ரேலிய தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் ஜம்பமாக அறிவித்தார்.
ஹிஸ்புல்லாக்கள் மேற்காசிய பிராந் தியத்தின் மாவீரர்களாக கருதப்படுகி றார்கள். இஸ்ரேலிய வான்வெளியை நோக்கி சீறிப் பாய்ந்த ஹிஸ்புல்லாக்களின் ராக்கெ ட்டுகள் ஷியாக்களின் ஆதரவை மட்டும் நாங்கள் பெறவில்லை. சன்னி முஸ்லிம் கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ட்ரூஸ் சமூக மக்களின் ஆதரவையும் பெற்றுவிட்டன என்பதை சொல்லாமல் சொல்லின.
வென்றது யார்? இஸ்ரேலா லி ஹிஸ்புல்லாக்களா? என்பதை இஸ்ரேலில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பட்டவர்த்தனமாக வெளியிட்டு வருகின்றன.
லெபனான் மீதான ஆக்கிரமிப்பு போரினைத் துவக்கிய நேரத்தில் இஸ்ரேலிய மக்களிடம் ஏறுமுகத்தில் இருந்த ஆதரவு தற்போது அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டதாக டெல்அவிவ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ராணுவம் அப்பாவிகளையே குறிவைத்து தாக்கியபோதும், ஹிஸ்புல்லாக் கள் இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக அன்றாடச் செய்திகள் அறிவித்தன.
இந்நிலையில் பிரபல இஸ்ரேலிய ஹாரெட்ஜில் வெளியான கருத்துக் கணிப்பில் 73 சதவீத மக்கள் இஸ்ரேல் இந்தப் போரில் வெற்றி பெற்றதாக பீற்றிக் கொள்ள முடியாது என்று தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் ஹிஸ்புல்லாக்களால் கடத்தப்பட்டதால் வெகுண் டெழுந்த இஸ்ரேல் லெபனானில் தெற்குப் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியதில் சில மணி நேரங்களில் ஹிஸ்புல்லாக்களின் பதிலடியில் எட்டு இஸ்ரேலியப் போர் வீரர்கள் இறந்தனர். இது போரின் முதல் நாளான ஜூலை 12ஆம் தேதி நடந்தது. சளைக்காத ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் ராக்கெட்டுகள் மழையென இஸ்ரேலிய வான்வெளியில் சீறின. இதில் இஸ்ரேலிய ராணுவனத்தினர் 130க்கும் மேற் பட்டோர் பலியானார்கள். இதுபற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும் 'குய்யோ முறையோ' என அலறாத குறையாக இஸ்ரேலிய மக்கள் ஆடிப்போய் விட்டனர்.
1982ல் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்தும், பெய்ரூட்டின் சப்ரா, ஷட்டிலா என்ற இரு பாலஸ்தீன அகதி முகாம்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட மனிதகுல விரோத தாக்குதலை எதிர்த்தும் அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தி னால் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏரியல் ஷரோன் பதவியை விட்டு ஓட வேண்டியதாயிற்று. இஸ்ரேலியர்களின் கருத்துக் கணிப்பினை வெளியிட்ட ஹாரெட்ஜ் செய்தி ஏடு யஹுத் ஓல்மர்ட் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
யஹுத் ஓல்மர்ட் குருட்டுத்தனமாக ராணுவத்தின் சொற்படி ஆடுகிறார், முக்கிய வினாக்கள் கூட அவர் விடுப்பதில்லை.
ஒருநாள் ஹஸன் நஸருல்லாஹ், பதுங்கும் அரணிலிருந்து வெளியே வந்து, தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தால் ஓல்மர்ட் தனது பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்று ஹாரெட்ஜ் பத்திரிகை கடுமையாகச் சாடியிருக் கிறது.
நஸருல்லாஹ் வந்தார், தொலைக் காட்சியில் உரையாற்றினார், மக்களுக்கு நன்றி தெரிவித்தார், போராளிகளைப் புகழ்ந்தார். ஹாரெட்ஜ் செய்தி ஏடு குறிப்பிட்டதைப் போலவே ஓல்மர்ட் ஓடவேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்.
ஓல்மர்ட் மிகக்குறைந்த ராணுவ அறிவே கொண்டவர் என்று தெரிவித்த அந்நாட்டு ஊடகம், இஸ்ரேலின் வரலாற்றில் ராணுவம் சொதப்பியது ஓல்மர்ட்டின் தலைமையின் கீழ்தான் என்றும் விளாசித் தள்ளியிருக்கிறது.
போர் முடிந்த பிறகு இஸ்ரேல் புதிய பிரதமரை பார்க்கப் போகிறது என்றும் கடுமையான கருத்துக்களை இஸ்ரேலிய மக்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் ஹிஸ்புல்லாக்களின் வெற்றியை அங்கீகரித்தாகிவிடும், போர் நிறுத்தம் அறிவிக்க விடக்கூடாது என இஸ்ரேலிய பழமைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர்.
லெபனானின் டயர் பகுதியில் ஊடுருவ முயற்சித்த இஸ்ரேலிய கவச வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இஸ்ரேலிய ராணுவம் திணறியது. இஸ்ரேலிய எல்லைப்புற நகரான ஹைஃபா நகரத்தில், மழையெனப் பொழிந்த ஹிஸ்புல்லாக்களின் ராக் கெட்டுகளைக் கண்டு அஞ்சி நடுங்கியது இஸ்ரேல்.
தன்னிச்சையாகப் போரை நிறுத்தி னால் தோல்வியை ஒப்புக்கொண்டதாகி விடும். போரை நீடித்தால் பேரழிவு நிச்சயம். என்ன செய்வது என கையைப் பிசைந்த குள்ளநரி இஸ்ரேலும், கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த அதன் அமெரிக்க எஜமானும் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த பெரிசுகளின் கூடாரமான ஐக்கிய நாடுகள் சபைக்கு மறைமுக நெருக்குதல் கொடுத்தன.
குழந்தைகளின் மீதும், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் அகதிகள் மீதும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் தொடுத்த இஸ்ரேலைக் கண்டிக்க மனம்வராத அமெரிக்காவின் கருணை யற்ற போக்கு உலக மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
கானாவில் குழந்தைக் கொழுந்துகளை கொன்று குவித்தபோதும், லெபனானில் உள்கட்டமைப்பை நிர்மூலமாக்கிய போதும், லெபனானில் பிழைப்புக்காகச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வெளி நாட்டு மக்களின் வாழ்வு கேள்விக் குறியான போதும் களத்தில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை போர் நிறுத்தத்திற்கு ஆணை பிறப்பித்தது.
உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை இஸ்ரேலைக் குறித்து ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கலாம். ஹிஸ்புல் லாக்களை மோசமாக பயங்கரமாக வருணித்திருக்கலாம். ஆனால் அப்பாவி பொதுமக்களை இஸ்ரேலிடமிருந்து காப்பாற்றியது போலவே, ஹிஸ்புல்லாக் களிடமிருநது இஸ்ரேலியப் படையினரை ஐ.நா. காப்பாற்றி இருக்கிறது.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1701ஐ கூர்ந்து கவனித்தால் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறியது போல் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறித்து காலக்கெடு குறிப்பிடப்படவே யில்லை. அவ்வாறே ஹிஸ்புல்லாக் களினால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய வீரர்களையும் ஹிஸ்புல்லாக்கள் இவ்வளவு காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படவில்லை.
ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை போர் தொட ரும் என்று யூத பயங்கரவாதிகளும், புஷ்ஷும் போட்ட வெறிக்கூச்சல் முதன் முறையாக புறக்கணிக்கப்பட்டிருக் கிறது. லெபனான் எல்லையை நோக்கி ஆக்ரோஷமாகப் புறப்பட்ட இஸ்ரேலியத் துருப்புகளும் கவச வாகனங்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் நிலைகளைச் சென்றடைந்துள்ளன.
மேற்காசியாவின் போக்கிரி தாதாவின் படுதோல்வி குறித்த செய்திகளை உலக வரலாறு பதிவு செய்துவிட்டது. ஹிஸ்புல்லாக்களின் பிரமிக்கத்தக்க வெற்றியை சர்வதேச ராணுவ வியூக வல்லுனர்கள் ஆய்வு செய்யத் தொடங்கி விட்டனர்.
சிரியாவும் ஈரானும் லெபனானுடன் சேர்ந்து குதூகலத்தில் திளைக்கின்றன. அரபுகளுக்கு இந்த வெற்றி உண்மையிலேயே பெரியதுதான் எனினும் வளை குடாப் பிராந்தியத்தில் நிரந்தர வெற்றி கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றனர். நாமும்தான்!
ஹஸன் நஸருல்லாஹ்
ஈராக்கின் நஜஃப் நகரில் மார்க்கக் கல்வி கற்ற ஸயீத் ஹஸன் நஸருல்லாஹ், அமல் இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்பாஸ் அல் முஸவ்வியிடம் அரசியல் பால பாடம் கற்றவர். மிக இளம் வயதிலேயே லெபனானில் அமல் அமைப்பின் அரசியல் திட்ட அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982ல் இஸ்ரேலின் ஆக்கிர மிப்புக்குப் பிறகு ஹிஸ்புல்லாஹ்வில் இணைந்தார். பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலை எதிர்த்து நிழற்போராளியாக விளங்கினார்.
நஸருல்லாஹ், லெபனானில் கிராமப்புறத்தில் பிறந்த ஃபாத்திமா யாசினை மண முடித்தார். தனது மூத்த மகன் ஹாதியை இஸ்ரேலியப் படைகளுக்கு பறிகொடுத் தார். அப்போது அவரது அன்பு மகனுக்கு வயது 18 தான்.
இந்த 44 வயது தலைவர் ஒரு புத்தகப் பிரியராம். குறிப்பாக அரசியல் தலைவர் களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு இவருக்கு மிகவும் பிடித்தமானது. இஸ்ரேலிய பிரதமர்களாக இருந்த 'ஷரோனின் நினைவுகள்' மற்றும் பென்ஜமின் நேதன் யாஹுவின் 'சூரியனின் கீழ் உள்ள நிலப்பரப்பு' என்ற இரண்டு நூல்களும் அவருக்கு பிடித்தமானதாம்.
எதிரிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியம் அல்லவா! என்று கூறும் நஸ்ருல்லாஹ், ஷேக் முஸாவி லி இஸ்ரேலிய தீய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பிறகு 1992ல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவராகிறார்.
இவர் தலைமையேற்ற 8 ஆண்டுகளில் இஸ்ரேலின் 22 ஆண்டுகால ஆக்கிர மிப்பு முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல் லி ஹிஸ்புல் லாஹ் இடையே கைதிகள் பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவேறவும் (2004) முக்கியப் பங்கு வகித்தார். தொடர்ந்து மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் அதிகம் விரும்பப்படும் மனிதராக அவர் உருவெடுத்துள்ளார்.
களங்களில் சாகசங்கள் நிகழ்த்தினாலும், சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வாக முடியும் என்று நஸருல்லாஹ் நம்புகிறார்.
இஸ்லாம் வணக்கம் செலுத்துவதை மட்டும் கற்றுத்தரவில்லை. மனித சமூகத்தை உன்னதமான முறையில் வடிவமைக்கும் அற்புத செய்தியையும் வழங்குகிறது என்கிறார். இஸ்லாம் மட்டுமே மனிதசமூகம் சந்திக்கும் அனைத்து வினாக் களுக் கும் விடையாக இருக்க முடியும் என்கிறார் வெஞ்சமரில் விளையாடிய வீரர்களின் தலைமைத் தளபதி ஹஸன் நஸ்ருல்லாஹ்.
பீதியில் பிரிட்டன்
தெற்கு லெபனானில் நிலைநிறுத்தப்படும் ஐ.நா. அமைதி காக்கும் படையில் மலேஷியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ், நேபாளம், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது துருப்புகளை அனுப்ப திட்டமிட்டுள்ளன. டென் மார்க் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது. எகிப்து, இத்தாலி முதலான நாடுகள் துருப்புகளை அனுப்புவது குறித்து தீவிர பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டன் தனது படைகளை அனுப்பத் தயாராக இல்லை என தெரிவித்து விட்டது. ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் தாங்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் (அதாவது தொடர் உதை வாங்குவதால்) தங்கள் துருப்புகளை அனுப்ப முடியவில்லை என ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதுவர் எமிர் ஜோன்ஸ் பெர்ரி தெரிவிக்கிறார்.
இதனிடையே, இஸ்ரேலின் இந்த படுதோல்வி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரேலில் 65 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓல்மர்ட் வெளியேற வேண்டும் என இஸ்ரேலில் போராட்டம் வலுத்து வருகிறது.
மூன்றாம் முறையாக அறுபட்ட மேற்குலகம்
லெபனானிலிருந்து 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று நடையை கட்டிய இஸ்ரேலியப் படைகளின் வெற்றிகரமான(!) வெளியேற்றம் மேற்குலக சக்திகளுக்கு கிடைத்த மூன்றாது மூக்குடைப்பாக வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படு கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நசுக்கிய இனவெறி இஸ்ரேலை ஹமாஸ் தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் எதிர் கொண்டது. யூத சாம்ராஜ்யம் குலுங்கியது.
உயிரை துச்சமென நினைத்த ஹமாஸ் போராளிகள் மன உறுதிக்கு முன்பு இஸ்ரேல் வல்லாதிக்க அரசால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என முத்திரைக் குத்தி அழிக்க முற்பட்டனர். அதன் அற்புதத் தலைவர்களான ஷேக் அஹ்மது யாஸினையும், அப்துல் அஜீஸ் ரண்டஸியையும் கொடூரமாக ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை புரிந்தது. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், நாங்கள் ஜனநாயகத்தை மட்டுமே அங்கீகரிப் பவர்கள் என்று பசப்பிய யூத பயங்கரவாதிகளின் முகத்தில் கரிபூசுவதைப் போல ஹமாஸ் அரசியலில் குதித்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது. அதை சகித்துக் கொள்ள முடியாத ஜியோனிஸ பயங்கரவாதிகள், பொருளாதாரத் தடை விதித்தார்கள். இப்பொழுது கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தாலும், உள உறுதி யுடன் போராளிகள் நிலைத்து நிற்கிறார்கள்.
அவ்வாறே ஈராக்கில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கிடைத்து வரும் அடிகள் அது வரலாற்றிலேயே எதிர்பாராதது. ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரினை எதிர்த்து அமெரிக்காவில் வலுத்துவரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி. 1400க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் போராளிகளால் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்கள் அதிகமாக அடிவாங்கியது ஈராக் பாலைவன மணல்வெளிகளில்தான் என்ற சாதனை சரித்திரமும் அவர்களுக்கு உண்டு.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இஸ்ரேலும் அதன் எஜமான் அமெரிக்காவும் தற்போது மீண்டும் அவமானத்தில் சுருண்டு போய் உள்ளனர். மத்தியக் கிழக்கின் சக்தி வாய்ந்த ராணுவத்தினைக் கொண்ட இஸ்ரேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மூச்சுத்திணறி வருவதை தற்போது உலகம் கண்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment